சோகம்... கழுத்தில் பந்து தாக்கி ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவில் பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மெல்பர்ன் புறநகரான ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி வந்த பென் ஆஸ்டின், கடந்த 28-ம் தேதி பயிற்சியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து திடீரென அவரின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்ததாகப் பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று (அக்.30) அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது. விபத்தின்போது பென் ஆஸ்டின் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், கழுத்துப் பகுதியை பாதுகாக்கும் சிறப்பு பட்டை (neck guard) இல்லாததுதான் உயிரிழப்புக்குக் காரணமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் பந்து தாக்கி உயிரிழந்த துயரத்தை நினைவூட்டியுள்ளது. அப்போது ஹியூஸும் காதருகே பந்து பட்டதில் சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பென் ஆஸ்டினின் மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கருப்பு பட்டை அணிந்து மரியாதை செலுத்தினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
