கோட்டாவில் மேலும் ஒரு பலி... பூச்சி மருந்து குடித்து நீட் மாணவன் தற்கொலை.. !!

 
கோட்டா

 இந்தியாவில் மருத்துவ படிப்புக்களுக்கு நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. இதற்கான பயிற்சி அளிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு சமீபகாலமாக மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. 2023ல் மட்டும் இதுவரை 23 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலுமே தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

விஷம்


உத்தரப்பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தில் வசித்து வருபவர்  சூர்யபிரகாஷ். இவரது மகன் பிரியம் சிங்.   இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள விக்யான் நகரில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்நிலையில், பிரியம் சிங் பூச்சிமருந்து குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது தந்தை சூர்யபிரகாஷ் போலீஸில்  புகார் அளித்துள்ளார். தனது மகனின் மனஅழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே காரணம் என புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து சூரியபிரகாஷ் தந்தை “  பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள் எனது மகனை துன்புறுத்தினார்கள். என் மகன் படிப்பில் பின் தங்கியிருப்பதாகவும், அதனால் அவன் நீட்தேர்வில் தோல்வியடைவான் எனவும்  அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.அதனால் தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டான்.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

அத்துடன் நான் கோட்டாவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தேன். பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் பின் தொடர்ந்ததுடன், எனக்கு மிரட்டலும் விடுத்தனர்.  " எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தனக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் சூர்யபிரகாஷ் அளித்துள்ளார்.இந்தப்  புகாரின் அடிப்படையில்  தற்கொலைக்குத் தூண்டியதாக விக்யான் நகரில் உள்ள நீட் பயிற்சி நிறுவனத்தின்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிரியம் சிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டது.கோட்டா நகரைப் பொறுத்தவரை 2015ல் 18 மாணவர்கள், 2016ல் 17 மாணவர்கள், 2017ல் 17 மாணவர்கள்,  2018ல் 20 மாணவர்கள், 2019ல் 18 மாணவர்கள், 202ல்12 மாணவர்கள் என இந்த தற்கொலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பாண்டில்  தான் இதுவரை இல்லாத அளவு 26 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web