கடலூரில் சோகம்... மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா உள்ளிட்ட பெண்கள் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பெய்த மழையுடன் கூடிய மின்னல் தாக்கி, நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தவமணி என்ற பெண் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரே ஊரைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
