தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த கோர விபத்து: சிறுவன் பரிதாப பலி!

 
ரயில் தண்டவாளம் ரயில் தண்டவாளம்

ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவரும், அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத வேகத்தில் வந்த ரயில் மோதியதில், வாகனத்தில் இருந்த மூவரும் சுமார் ஏழு மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டனர். இந்தக் கொடூரக் காட்சியைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் உதவிக்கு ஓடி வந்தனர்.

இந்த விபத்தில், வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த தியன் என்ற சிறுவன் ரயிலின் பலத்த தாக்கத்தைத் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். துள்ளித் திரிந்த சிறுவன் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மன் மற்றும் மற்றொரு சிறுவனான லாம் ஆகியோருக்குப் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை