சத்தீஸ்கரில் ரயில் விபத்து... உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை பெரும் ரெயில் விபத்து ஏற்பட்டது. அப்போது நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலில் மெமு ரெயில் வேகமாக மோதியது. மோதிய தாக்கத்தில் மெமு ரெயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.

தொடக்கத்தில் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடுமையாக காயமடைந்த 20 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட காரணத்தை கண்டறிய ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், மீட்பு பணிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
