ரயில் பயணிகளே உஷார்.. துப்பட்டாவை போட்டு நகைகளை ஆட்டைய போடும் பெண்கள்.. போலீசார் அதிரடி!
சென்னை சைதாப்பேட்டை, மாம்பலம், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் ஏற அவசரம் காட்டும் முதியவர்கள் மற்றும் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்படுவதாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புகார் எழுந்தது. கடந்த மாதம் மாம்பலம் ரயில் நிலையத்தில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகைகள் திருடப்பட்டன. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரயிலில் ஏற முயன்ற மூதாட்டி மீது இரு பெண்கள் துப்பட்டாவை வீசியதும், கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாம்பலம் ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கிண்டி ரயில் நிலையத்தில் 2 பெண்கள் நீண்ட நேரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவதை அறிந்த அவர்கள் அதை சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது மாம்பலம் ரயில் நிலையத்தில் மூதாட்டியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண்கள் இவர்கள் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பெண்களையும் கைது செய்து மாம்பலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருவரும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முத்து (எ) ரேகா (33), பச்சி (எ) கண்மணி (36) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இருவரும் ஆந்திராவை சேர்ந்த ரயில் நிலைய திருடர்கள் என்பது தெரியவந்தது. மேலும் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் 15க்கும் மேற்பட்டோரின் செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க நகைகளை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!