அறுந்து விழுந்த மின்கம்பி.... சென்னை அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

 
ரயில்
 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை–அரக்கோணம் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் எக்ஸ்பிரஸ்

உயர் அழுத்த மின்கம்பி ரயில் பாதையில் விழுந்ததால், அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் அவசரகாலமாக நிறுத்தப்பட்டன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ரயில் ஓட்டுநர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரயில்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

எக்ஸ்பிரஸ் ரயில்

இதன் விளைவாக, பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை நோக்கி வந்திருந்த வந்தே பாரத் உட்பட பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!