பயணிகளின் கனிவான கவனத்திற்கு .... தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்களின் புறப்படும் மற்றும் நிறுத்தப்படும் நிலையங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 10 முதல் 30 வரை அமலில் இருக்கும் எனவும், பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், ராமேஸ்வரம், கொல்லம் ஆகிய இடங்களில் இருந்து எழும்பூரை நோக்கி புறப்படும் உழவன், சேது, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் நிறுத்தப்படும். அதேபோல், எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து துவங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. மேலும், மும்பை, குருவாயூர் வழித்தடங்களிலும் சில ரயில்கள் கடற்கரை அல்லது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அகமதாபாத்–திருச்சி வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி–அகமதாபாத் விரைவு ரயில்களின் வழித்தடங்களும் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. இவை அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற நிலையங்களில் நிறுத்தங்களை தவிர்க்கும். பயணிகளின் வசதிக்காக திருத்தணியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
