தீபாவளி விடுமுறைக்கான ரயில் டிக்கெட்... இப்படி செஞ்சா ஈஸியா டிக்கெட் கிடைக்கும்?!

 
ரயில்

பண்டிகை நாட்களுக்கான சொந்த ஊருக்கு செல்பவர்கள் பெரும்பாலும் கடைசி நேரத்தில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்கலை என்று புலம்புவதைப் பார்த்திருக்கலாம். மேம்போக்காக ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சி செய்தவர்கள் தான் இப்படி புலம்புவார்கள். நாம் செல்ல வேண்டிய ஊருக்கு அருகில் செல்ல கூடிய ரயில்களில் அவர்கள் முயற்சி செய்யவே மாட்டார்கள். ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கென்றும் தனியே இருக்கைகளுக்கான கோட்டா உண்டு. பண்டிகை கால கொண்டாட்டங்களில் எப்போதுமே ரயில் டிக்கெட் முன்பதிவு பெரும்பங்கு வகிக்கிறது. விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட் கிடைத்து விட்டாலே பாதி கொண்டாட்டம் சந்தோஷத்துல முடிஞ்ச மாதிரி தான். அவ்வளவு சிரமமானது பயண களைப்பு. இந்நிலையில், இந்த வருஷ தீபாவளி விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 12ம் தேதி துவங்குகிறது. தீபாவளி நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையை காலி செய்து விட்டு சாரை சாரையாக சொந்த ஊர் நோக்கி படையெடுப்பார்கள். 

பொதுமக்களின் தேவையையும், வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், அந்த சிறப்பு பேருந்துகளும், ஊரைச் சுற்றி, எல்லா ரயில்களுக்கும் வழி விட்டு செல்கிற சிறப்பு ரயிலும் சென்று சேர்வதற்குள் தீபாவளியே முடிந்து விடுகிற கதை தான் எரிச்சல். தொலை தூர பயணங்களை பொறுத்தவரை பெரும்பாலான நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது முன்பதிவு செய்த ரயில் பயணம் தான். 

ரயில் முன்பதிவு

குறைவான பணத்தில் வசதியான பயணம் என்பதற்காக பலரும் ரயில் பயணங்களையே விரும்புவர்.   அதேசமயம் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்வதும் வழக்கம். அந்த வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மூலம்  120 நாட்களுக்கு முன்னதாகவே பயண சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில்

அதன்படி  நவம்பர் 12ம் தேதி தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜூலை 12ம் தேதி முதல் தொடங்குகிறது.  நவம்பர் 9ம் தேதி  செல்ல வேண்டியவர்கள்   ஜூலை 12ம் தேதியும் , நவம்பர் 10ம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ம் தேதியும்,  நவம்பர் 11ம் தேதி செல்பவர்கள் ஜூலை 14ம் தேதியும், நவம்பர் 12ம் தேதி செல்பவர்கள் ஜூலை 15ம் தேதியும் ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கிடைக்கலைன்னா இப்பவே ரயில் கிளம்பும் இடத்தில் இருந்து அடுத்த ஸ்டேஷனில் இருந்து டிக்கெட் பதிவு செய்து பாருங்க. உதாரணத்துக்கு, மாம்பலம், தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கு. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

From around the web