பொங்கல் முன்பதிவில் இன்றும் ஏமாற்றம்... 5 நிமிடங்களில் காலியான ரயில் டிக்கெட்டுகள்!

 
பொங்கல் ரயில்
 

பொங்கல் விடுமுறை தினங்களையொட்டி, ஜனவரி 10ம் தேதி பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கிய நிலையில், முன்பதிவு துவங்கிய 5 நிமிடத்திலேயே காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது. 

அதிகாலை முதலே வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று காலையும் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவுக்கு காத்திருந்த பொதுமக்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகள் முழுமையடைந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். 

ரயில்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப்பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல்

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. 

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5 மணி முதல் டிக்கெட் கவுன்டரில் காத்திருந்த பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தான் கிடைத்துள்ளது.

ஜனவரி 12-ந் தேதிக்கு பயணம் செய்ய நாளையும், போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை