செம.. திருநங்கைகள் பிரபஞ்ச அழகிப் போட்டியில்... அசத்தல் சாதனை!!

 
திருநங்கை

 ஆண்களுக்கு சரிசமமாக ஒரு புறம் பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றனர் . தற்போது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இணையாக திருநங்கைகளும் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை தட்டிச் செல்கின்றனர்.  உலக அழகிப் போட்டிகள் சால்வடாரில் நடைபெற உள்ளது. இதில்  புதுமை நிகழ்வாக  பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான மேடையில், திருநங்கையர்  கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த 2 திருநங்கை அழகிகளும்  ஏற்கனவே பல  போட்டிகளில்   பங்கேற்று  விருதுகளை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கை


ஆண்கள் - பெண்களுக்கு நிகராக  3ம் பாலினத்தவரும் சாதனைகள் படைத்து வருகின்றனர்.ஒரு காலத்தில்  தடைகள் பலவற்றை கடந்து பொதுவெளியில்   பிரவேசிப்பதே பெரும் சாதனையாக இருந்த நிலையில் தற்போது 3ம் பாலினத்தவரின் முன்னோடிகள் சிலர், உலகளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அழகிப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கி உள்ளனர்.மத்திய அமெரிக்கா   எல் சால்வடாரில் 72வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் மிஸ் நெதர்லாந்து அழகியான ரிக்கி கோலே, மிஸ் போர்ச்சுக்கல் அழகியான மரினா மச்சேட் என இரு திருநங்கையரும் கலந்துகொள்ள உள்ளனர். திருநங்கையரான இவர்கள் இருவரும், 90 அழகிகள் மோதும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் தங்கள் தேசம் சார்பாக பங்கேற்கிறார்கள்.

திருநங்கை
 இருவரில் மரினா மச்சேட் அடிப்படையில் ஒரு விமானப் பணிப்பெண்.   சர்வதேச அளவில்  திருநங்கையர்களுக்கு முன்னோடியாக இருப்பதே பெரும் சாதனை என இவர் பெருமிதம் கொள்கிறார். விமான பணிப்பெண், மிஸ் போர்ச்சுக்கல் அழகிப் போட்டி இவைகளில் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே கலந்து கொள்ளவும்  வெற்றி பெற முடிந்ததாகவும்  இவர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு திருநங்கை அழகியான ரிக்கி வலேரி கோலே,   ஜூலை மாதம்தான் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை வென்றிருந்தார். ஆணாகப் பிறந்து   பெண்ணாக உணர்ந்ததால்   உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள பெரும் சர்ச்சைகளும்,  எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ’உயிரியல் அடிப்படையில் ஆணாக பிறந்தவர்கள், பெண்களுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்பது விசித்திரமானது, மோசமான முன்னுதாரணம்’ என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 
மெரினா மச்சேட் மற்றும் ரிக்கி வலேரி கோலே  இருவருக்கும் முன்னதாக, ஸ்பெயினின் ஏஞ்சலா போன்ஸ் என்ற திருநங்கை ஏற்கனவே உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 2018ல் உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதல் திருநங்கை போட்டியாளராக  வரலாறு படைத்தார். ஏஞ்சலாவை பின்பற்றி தற்போது எல் சால்வடார் பிரபஞ்ச அழகிப் போட்டியின் மேடையில், 2 திருநங்கையர் கலந்து கொண்டு அசத்த போகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web