டிக்கெட்.. டிக்கெட்.. ஒரு நாள் கண்டக்டராக மாறிய பள்ளி மாணவி..சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகள்..!

 
வித்யா

கர்நாடகா மாநிலம், அஃப்சல்பூர் கதாஹாரா கிராமத்தில் வித்யா 8ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த மாணவிக்கு பஸ் கண்டக்டராக பணிபுரிய வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது. இதையடுத்து மாணவி வித்யா, போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தனது கண்டக்டர் ஆகும் ஆசையை தெரிவித்தார்.

மாணவி வித்யாவின் ஆசையை கேட்ட அதிகாரிகள், கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என தெரிவித்தனர். முதலில் மாணவி வித்யாவுக்கு டிக்கெட் கொடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி வித்யா, கடகரா செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிய அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அப்சல்பூரில் இருந்து கடஹாரா செல்லும் அரசு பேருந்தில் வித்யா என்ற மாணவி கண்டக்டராக பணிபுரிந்தார். தன்னுடன் அமர்ந்திருந்த நடத்துனருடன், பயணிகளிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு அதற்கான டிக்கெட்டை வழங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மாணவியின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web