நெகிழ்ச்சி... மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை!!

 
மொபைல் வெளிச்சத்தில் சிகிச்சை

ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக படுமோசமான மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அத்துடன் சிறு குறு வியாபாரிகள், மருத்துவமனைகள், முதியவர்கள், குழந்தைகள், உடைய வீடுகள், பள்ளிக்கூடங்கள் என  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மொபைல் வெளிச்சத்தில் சிகிச்சை

ஆந்திராவின் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியது.  இரவில் அங்கு சிகிச்சைக்காக நோயாளிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

மொபைல் வெளிச்சத்தில் சிகிச்சை

மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாததால் இதுபோன்ற மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்  மின்வெட்டை பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை  அளித்து வருவது  பெரும் நெகிழ்ச்சியாக இருப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web