திருச்சியில் வீடு புகுந்து ரெளடி வெட்டி கொலை! குழந்தைகள் கண்முன்னே கொடூரம்!

 
திருச்சி

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன். இவர் தற்போது சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள நந்தா நகரில் உள்ள வாடகை வீட்டில் மனைவி பிரதீபா, மகள், மகன் ஆகியோருடன் கடந்த ஒரு வருடமாக குடியிருந்து வருகிறார்.

அடித்தே கொலை
இன்று காலை பரணிதரனின் மனைவி வேலைக்கு சென்றபின் பரணிதரன் அவரது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தபோது காரில் வந்த நபர்கள் அரிவாளால் பிள்ளைகள் கண்முன்னே பரணிதரனை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

ஆம்புலன்ஸ்
இதுபற்றி தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் பரணிதரன் உடலை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக குழுமனையை சேர்ந்த ஆட்டோ சக்தி என்கிற சக்திவேல் என்ற நபர் பரணிதனை வெட்டி கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கொலை செய்யப்பட்ட பரணிதரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web