திருச்சி சிறை பஜாரில் தீபாவளிக்காக இனிப்பு-கார வகைகள் விற்பனை.. ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்!
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மத்திய சிறை பஜாரில் கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறைச்சாலையின் 280 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் கைதிகள் காய்கறி தோட்டங்கள், செங்கரும்பு விளைவு, இனிப்பு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்காக சிறையில் தயாரிக்கப்பட்ட பூந்தி, லட்டு, சிவப்பு லட்டு, ஸ்பெஷல் லட்டு, பாதுஷா, மைசூர் பாக், திருநெல்வேலி அல்வா போன்ற இனிப்புகள் மற்றும் சாதாரண மிக்சர், ஸ்பெஷல் மிக்சர், ஆந்திரா முறுக்கு, மிளகு காரம், ஓமம் காரம், ஓலை பக்கோடா, பட்டர் முறுக்கு போன்ற கார வகைகள் சிறை பஜார் முன்பகுதியை அலங்கரித்து வாடிக்கையாளர்களை கவர்கின்றன. வாடிக்கையாளர்கள் இந்த இனிப்பு மற்றும் கார வகைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
