முதல்வர் திடீர் கள ஆய்வு... 4 மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை...!!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் கள ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். அந்த வகையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் சட்டம் ஒழுங்கு நிலவரம், வளர்ச்சித் திட்ட பணிகள், அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின்   கள ஆய்வு செய்ய உள்ளார்.  

முதல்வர் ஸ்டாலின்

அதே நேரத்தில் இந்த 4  மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது.முதல் நாள் கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளுடன்  சட்டம் - ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அடிப்படை வசதிகள், வேளாண், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் உட்பட   28 துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின்   ஆய்வு செய்கிறார்.

ஸ்டாலின்


 முதல்வர் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழிநெடுகிலும் ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வரின்   பாதுகாப்புத்துறை அதிகாரி , மாவட்ட கலெக்டர்கள்  நேரில் ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில் முதல்வர் ஆய்வின் போது முதல்வரிடம் காணொலி காட்சி மூலம்  மாவட்டத்தில் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கான ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளன .   முதல்வரின் வருகையை ஒட்டி பிரம்மாண்ட வரவேற்புகளும் கட்சி சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web