பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்த சரக்கு லாரி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

 
சரக்கு லாரி

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள பழைய ரயில் நிலையம் அருகே, அதிகபாரம் காரணமாக சரக்கு லாரி இரண்டாக உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெல்லாரி பகுதியில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட இரும்பு ரோல்களை, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக நேற்று இரவு ஒரு கனரக லாரியில் மிகப்பெரிய அளவில் இரும்பு ரோல்கள் ஏற்றப்பட்டிருந்தன.

சரக்கு லாரி

அந்த லாரி வையாவூர் சாலையில் சென்ற போது, அதிகபாரம் தாங்க முடியாமல் வாகனத்தின் பின்பகுதி திடீரென உடைந்து சரிந்து விழுந்தது. இதனால் இரும்பு ரோல்கள் சாலையில் உருண்டு விழுந்து சில நிமிடங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.

விபத்து

சம்பவத்தின் போது அருகில் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடைந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை மீண்டும் சீர்செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?