பாகிஸ்தான் அணு சோதனையில் ஈடுபடுகிறது - ட்ரம்ப் குற்றச்சாட்டு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். நேற்று (நவம்பர் 3) அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அமெரிக்கா 33 ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் வகையில், தனது பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். “ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணு ஆயுத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் ஒரு வெளிப்படையான நாடு; நமது சோதனைகளை வெளிப்படையாக அறிவிப்போம்” என்று அவர் கூறினார்.

டிரம்பின் இந்தப் பேட்டி சர்வதேச உறவுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுத சோதனை மீள ஆரம்பிப்பு உலகளாவிய பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் என்றும், பாகிஸ்தானின் அணு செயல்பாடுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்த சில நாட்களில் சர்வதேச நியூக்லியர் ஆணையம் (IAEA) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைகள் நடத்த உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
