போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதே எனக்கு மகிழ்ச்சி... நோபல் பரிசு குறித்து ட்ரம்ப்!

 
ட்ரம்ப்
 

உலகின் மிக உயர்ந்த கௌரவமான நோபல் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நோபல் பரிசு பெறும் கனவு நனவாகாததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், “மரியா கொரினா எனக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியபோது, அவர் நோபல் பரிசை எனக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் நான் பரிசை கேட்டதில்லை. அவர் அதை பெறுவது சரியானது, ஏனெனில் அவரது போராட்டத்தில் நானும் பங்கு கொண்டு உதவி செய்துள்ளேன்,” என்று கூறினார்.

மரியா மச்சோடா

மேலும், “போர்களை நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். அந்த மனநிறைவே எந்தப் பரிசையும் விட உயர்ந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?