முடியல... ஒரே அலைச்சல்... கதறும் டிடிஎப் வாசன்... !!

 
டிடிஎப் வாசன்

பிரபல தமிழ் யூடியூபர் டிடிஎப் வாசன். இவரது  சேனலை  உலகம் முழுவதும்  42 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ்  ஃபாலோ செய்து வருகின்றனர். இவர்  பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்டு, 2கே கிட்ஸ்களின் கனவு நாயகனாக தம்மை இருத்திக் கொண்டவர். இவர் யூடியூப் மூலம் பிரபலமடைந்து தற்போது   'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலைய்லி  அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில்  செப்டம்பர் 19ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும் வழியில்   தேசிய நெடுஞ்சாலையில்  டிடிஎஃப் வாசன், வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்.

டிடிஎப் வாசன்


இதனால் கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதே சமயத்தில்   அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்  கைது செய்யப்பட்டு  10 ஆண்டுகளுக்கு அவரது லைசென்சும்  ரத்து செய்யப்பட்டது.   மேலும்  வழக்கறிஞர், வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது. மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.   நவம்பர் 1ம் தேதி தொடர்ந்து 3  வாரங்களுக்கு தினமும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிஎப் வாசன்

அத்துடன்  அவரது யூடியூப் சேனைலை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இன்று வழக்கு விசாரணைக்காக காஞ்சிபுரத்தில் ஆஜரான டிடிஎப் வாசன்   "கையெழுத்து போட வந்துள்ளேன். இப்படி வந்துபோவது ரொம்ப அலைச்சலாக உள்ளது. இப்படி வரும்போது என்னுடைய ஒரு நாளே  முழுவதுமாக போய்விடும். டிடிஎஃப் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என ஒரு கம்பெனி ஆரம்பித்துள்ளேன். தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய  குறிக்கோள். இதுகுறித்தானத் திட்டத்தை தான் தற்போது முழு மூச்சுடன் செய்து  வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!