'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
டிடிஎஃப் வாசனுக்கு காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த விபத்திற்கு பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து சர்ச்சைகளும், சரிவுகளுமாக நேர்ந்து வருகிறது. கைது, டிரைவிங் லைசென்ஸ் ரத்து, காவல் நிலையத்தில் கையெழுத்து என்று சர்ச்சைகளும், சோதனைகளும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 'மஞ்சள் வீரன்' படத்தின் இயக்குநர் செல்அம், ' 'மஞ்சள் வீரன்' படத்தில் கதாநாயகான நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் நீக்கம் செய்யப்படுகிறார். அவருக்குப் பதிலாக புதிய நாயகன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பது அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியிடுவோம்.
இந்தப் படத்தில் முழுவதுமாக டிடிஎஃப் வாசன் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அவரது கவனம் வேறு பக்கம் உள்ளது என்பதால் மன வருத்தத்தோடு நாங்கள் படத்தில் இருந்து அவரை நீக்குகிறோம். அவர் கைது செய்யப்படுகிறார் என்பது காரணம் இல்லை. என்னுடைய சூழ்நிலைகளுக்கு அவர் ஒத்துவரவில்லை என்பதுதான் விஷயம்.
வில்லன் மற்றும் மற்ற நடிகர்களுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனுக்கான போர்ஷன் புதிய நாயகன் வந்ததும் படமாக்குவோம். இதுவரை 35% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது" என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!