இன்று த.வெ.க. பொதுக்குழு கூட்டம் ... அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விஜய் மீது பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. ஆரம்பத்தில் மவுனம் காத்திருந்த விஜய், பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு த.வெ.க. தனது அன்றாட கட்சி நடவடிக்கைகளில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது. கட்சியின் நிர்வாக பணிகளை ஒருங்கிணைக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார். இதன் மூலம் கட்சியின் அமைப்பு வலுவூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக த.வெ.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 2,000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு பொதுவெளியில் விஜய் பங்கேற்கும் இது முதல்நிகழ்ச்சி என்பதால், அவருடைய உரை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உரைக்குப் பிறகு பங்கேற்பாளர்களுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விஜயின் உரையை நேரடி ஒளிபரப்பாக கட்சியினர் மாநிலம் முழுவதும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
