நம்பாதீங்க... TVK உறுப்பினர் சேர்க்கை படிவம் போலியானது.... வைரலாகும் புஸ்ஸி ஆனந்த் ட்வீட்!

 
தமிழக வெற்றிக்கழகம்

தமிழ் திரையுலகில் இளையதளபதியாக வலம் வரும்நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி தமிழக  வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து  கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகி வருகிறது.  அதில்  கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல்  கட்சியின் செயல்பாடுகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில்   விஜய் காணொளி மூலம்  நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது


 

 

null


.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக  தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த  செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும்   தகவல்கள் வெளியாகியுள்ளது.சமூக வலைதளங்களில்  வைரலாகும்  கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவம்  பொய்யானது.

தமிழக வெற்றிக்கழகம்

 தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க கட்சி சார்பில், அறிமுகம் செய்யப்பட உள்ள செயலி மூலம் மட்டுமே நடைபெறும்.   விஜய்யின் பிறந்தநாளில்  ஜூன் 22ம் தேதி மதுரை மாவட்டத்தில் கட்சியின் முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக  நடத்த இருப்பதாகவும்   தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பிறகு  கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார்   என்பது குறிப்பிடத்தக்கது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web