100% கட்டண வலைதளமாகும் ட்விட்டர்.. எலான் மஸ்க் அதிரடி!! பயனர்கள் அதிர்ச்சி!!

 
எலான் மஸ்க்

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.  ட்விட்டர் பெயருக்கு பதிலாக  எக்ஸ் எனவும், லோகோ மாற்றம், ஆட்குறைப்பு, பணம் கொடுத்து பிரிமியம் அக்கௌன்ட் என பல மாற்றங்களை அடுத்தடுத்து அதிரடியாக செய்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில்  இஸ்ரேல் பிரதமர் , எலான் மஸ்க் சந்திப்பு நிகழ்ந்தது.  சுமார் ஒரு மணி நேரம் நீடித்த  இந்த உரையாடலில் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து விவாதிக்கப்பட்டது.

எலான் மஸ்க்


 கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே ட்விட்டரின் சமநிலையை ஏற்படுத்துமாறு மஸ்க்கை எதன் யாகு கேட்டுக்கொண்டார். இதற்கு போலி கணக்குகளின் நடமாட்டமே காரணம் என்ற மஸ்க், இதனை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.  

எலான் மஸ்க்


எக்ஸ் இணையதளத்தில் நுழைய ஒரு கட்டண அடிப்படையை கொண்டு வந்தால் மட்டுமே   போலி கணக்குகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் 100% கட்டண வலைதளமான மாற்ற மஸ்க் திட்டமிட்டு வருகிறார். பயனாளர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், சந்தா செலுத்துவதால் கிடைக்கும் அம்சங்கள் என்பது குறித்து அடுத்தடுத்து பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web