கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி!!தொடரும் சோகம்!!

 
மோசஸ்

சென்னை ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை படையின்  உடைத் தொழிற்சாலை பணியாளர்களின்  குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓ.சி.எப். நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும்  பட்டாபிராம் பீமாராவ் நகரை சேர்ந்த மோசஸ் (42), ஆவடி பஜார் நகரை சேர்ந்த தேவன் (55) மற்றும் ஜார்ஜ், ஆதாம் ஆகிய 4 பேரும் கழிவுநீர் தொட்டியில் இருந்த அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதற்காக தேவன், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கம்பியை வைத்து அடைப்பை குத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

கழிவு நீர்த்தொட்டி

அப்போது அவரை விஷவாயு தாக்கி   கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த   மோசஸ், கழிவுநீர் தொட்டிக்குள் உள்ள சிறிய படி வழியாக உள்ளே இறங்கி, மயங்கி விழுந்த தேவனை தூக்கிக்கொண்டு வெளியே வர முயற்சி செய்தார். அப்போது மோசசையும் விஷவாயு தாக்கியதில் மீண்டும் இருவரும்  கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே  விழுந்தனர்.உடனடியாக ஆதாம் மற்றும் ஜார்ஜ் இருவரும் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிறு கட்டி உரிய பாதுகாப்புடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, தேவன் மற்றும் மோசஸ் இருவரையும் மீட்டு மேலே தூக்கி வந்தனர். 

கழிவு நீர் தொட்டி


இருவரையும்  ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஷவாயு தாக்கியதில் தேவன், மோசஸ் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  போலீசார் உயிரிழந்த தேவன் மற்றும் மோசஸ் ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து  ஆவடி ராமலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும்  ஒப்பந்ததாரர் சம்பத்  மீது வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web