ஆடி மாசத்துல ரெண்டு அமாவாசை.... எந்த அமாவாசையில் வழிபடுவது? எது ஆடி அமாவாசை?!

 
அமாவாசை

அமாவாசை நாளில் முதியோர்களை வணங்கி வந்தால் குடும்பம் தழைக்கும்... பித்ருக்கள் சாபம் நீங்கும் என்பது நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லி விட்டு சென்ற தாரக மந்திரம். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை என்றால் கேட்கவே வேண்டாம்... சகலமும் கிட்டும். மாதந்தோறும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகள் விநாயரை வழிபட உகந்த நாட்களாக போற்றப்படுகின்றன. அதிலும் தேய்பிறைச் சதுர்த்தி,  'சங்கடஹர சதுர்த்தி' எனப்படுகிறது. இது எல்லாவகையான சங்கடங்களையும் நீக்கும் விரத நாள்.

விக்கினங்களைத் தீர்க்கும் நாள். இந்நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகரை அர்ச்சித்து வழிபட்டு இனிப்பினை படைக்க வேண்டும். அதன்பின் இரவு 08.05க்கு மேல் சந்திரனைத் தரிசித்து பின்னர் இரவு உண்ண வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகரை அர்ச்சித்து வழிபட்டு அருளைப் பெறலாம்.

ஐயர் புரோகிதர் சாமியார் தர்ப்பணம்
இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். அன்றைய தினமே ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் அமாவாசையும் சேர்ந்து வருகிறது. மாதப்பிறப்பு, தக்ஷிணாயனம், அமாவாசை என்று மூன்று புண்ணிய காலங்கள் இணைந்த ஆடிப் பண்டிகையை இந்தாண்டு கண்டு களிக்க உள்ளோம். மேலும், ஆடி மாதம் 31ம் தேதி (ஆகஸ்ட் 16ம்தேதி) மீண்டும் அமாவாசை வருகிறது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கல் வருகிற போது, ஆடி அமாவாசை எனும் சிறப்பு எதற்கு உண்டு? எல்லோருக்கும் ஏற்படும் ஐயம் தானே? அது ஏன் நம்முன்னோர்களை வணங்கி வழிபடுவதால் நமக்கு அத்தகைய கேள்வி எழுகிறது.

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ, பவுர்ணமியோ  வந்தால் முதலில் வருவதை விட்டு விட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் என்கிறார் ஸ்ரீதர் சாஸ்திரிகள்.

தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

எது ஆடி அமாவாசை ?

”பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய” என்பது  வாக்கியம். இதன்படி, பூர்வம் என்ற முதலாவதை ”த்யக்த்வா” விட்டு, பரம் என்கிற தான பின்னால் வருவதை “க்ராஹ்ய”  எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

எனவே, ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும், ஆடி 31ம் தேதி வரும் அமாவாசையை சிறப்புடைய ஆடி அமாவாசையாகக் கொண்டு, கடல் ஆறு, குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப் பெறுவோமாக!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web