பேருந்தில் மூதாட்டியின் நகைப் பறிப்பு... இரு பெண்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜாமணியின் மனைவி சேசம்மாள் (75), கடந்த 27ம் தேதி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று விட்டு ஊருக்குத் திரும்ப அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் நடுவே நின்று பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது பஸ் வில்லுக்குறி பாலம் அருகே சென்றபோது, கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்கச் சங்கிலி மாயமானதை கண்டு சேசம்மாள் அதிர்ச்சியடைந்தார். உடனே பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டார். பஸ் நிறுத்தப்பட்டதும் நகையை தேட முயன்றார். அந்த நேரத்தில் இரண்டு பெண்கள் அவசரமாக இறங்க முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த மற்ற பயணிகள் அவர்களை தடுத்து பிடித்தனர். சோதனையில், மூதாட்டியின் மாயமான சங்கிலி அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பவானி (29) மற்றும் மீனாட்சி (29) என தெரியவந்தது. இவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நகை பறிப்பு வழக்குகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை சிறையில் அடைக்கப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
