இரண்டரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு!

 
குழந்தை நீரில் மூழ்கி தண்ணீர் வாளி பக்கெட்

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற மகன் இருந்த நிலையில், மோனிஷாவின் தாயார் திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றிருந்ததால், தந்தை மாதப்பனுக்கு உதவியாக மோனிஷா தனது மகனை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பில்லியானூருக்கு சென்றிருந்தார். 

தண்ணீர் தொட்டி

இந்நிலையில் இரவு வீட்டின் முன்பு குழந்தை அம்ரிஷ் விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர் திடீரென குழந்தையை காணவில்லை என்று மோனிஷா சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் குழந்தை அம்ரிசை தேடி பார்த்தனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அம்ரிஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை வாயில் டேப்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்ரிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?