தைவானை புரட்டி போட்ட ரகசா புயல்... 14 பேர் பலி; 124 பேர் மாயம்!
தைவானில் ரகசா புயல் புரட்டிப் போட்டுள்ள நிலையில், ஏரி உடைந்து கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து, ஆயிரக்கணக்கானோர் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 124 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தைவானில் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்லும் ரகசா புயல் ஹாங்காங்கையும் தாக்கும் என கூறப்படுகிறது.
நேற்று முன் தினம் தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கியது. இதில் தைவானில் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. கூடவே புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் மலை பகுதியில் அமைந்த ஏரி ஒன்று உடைந்தது. பாலமும் சேதமடைந்ததில் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது.

அந்த ஏரியின் நீர் கொள்ளவு 91 மில்லியன் டன்னாக உள்ள நிலையில் ஏரியில் இருந்த நீர் குவாங்பு நகருக்குள் புகுந்து நகரையே புரட்டி போட்டதில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
