துணை முதல்வராகிறார் உதயநிதி… இன்னும் சற்று நேரத்தில் மாஸ் அறிவிப்பு?

 
சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!
இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதல்வராக அறிவிக்கப்பட இருக்கிறார் என நேற்று இரவு முதலே திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வரப்படுகிறது. 

சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் ‘ஸ்டாலின் விருது’ பெற்ற தஞ்சை பழனிமாணிக்கம் பேசுகையில், உங்கள் பெயர் அறிவிக்கப்பட்ட போது பேராசிரியர் அன்பழகன் வரவேற்றதைப் போல நாங்களும் காத்திருக்கிறோம். இன்னும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்... “உதயநிதியை துணைமுதல்வராக அறிவிக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே கேள்வி எழுப்பினார். அப்போது திரண்டிருந்த திமுக தொண்டர்களிடையே எழுந்த கரகோஷம் அடங்க நேரமாயிற்று.

உதயநிதி

திமுக இளைஞரணி பொறுப்பு கொடுக்கப்பட்டதில் இருந்தே தேர்தலில் போட்டியிடுவாரா? அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்று ஒவ்வொரு முறையும் உதயநிதியிடம் கேள்வி எழுப்பிய போதும், “தலைமை தான் முடிவெடுக்கும்? இந்த தகவல்கள் எல்லாம் எனக்கே புதுசு” என்று கூறி வந்தார். அதே போன்று துணை முதல்வர் பதவி குறித்து கேட்டபோதும், எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாக தான் இருக்கிறோம் என்றார். 

உதயநிதி

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கிற மாற்றம் வரும்’ என்று கோடிட்டு காட்டியதையும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றே திமுக தொண்டர்கள் மகிழ்ந்தனர். குறிப்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதில் திமுக இளைஞரணியினர் உற்சாகமாக உள்ளனர். 

இந்நிலையில், இன்று செப்டம்பர் 18ம் தேதி காலை 11.30 மணியளவில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு திமுக உயர்மட்ட தலைவர்களிடத்திலும், தொண்டர்களிடையேயும் பரவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை