யுகாதி செல்வத்தைக் கொண்டு வரும்.. மாங்காய் பச்சடி இப்படி செய்து பாருங்க!

 
மாங்காய் மாங்காய்

யுகாதி திருநாளின் ஹை-லைட் விஷயமே மாங்காய், வேப்பம்பூ பச்சடி தானே? வாழ்க்கையின் தத்துவத்தை நமக்கு சொல்லிக் கொடுத்து, நல்வழி படுத்தும் தன்மையும் இந்த பச்சடிக்கு இருக்கு.

யுகாதி திருநாளன்று வேப்பம்பூவை உணவில் சேர்ப்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.  அனைவரது வாழ்விலும் ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இதனால் தான் இனிப்பும், கசப்பும் சேர்ந்திருக்கும்  வேப்பம்பூ பச்சடி  உணவில் சேர்க்கப்படுகிறது.

வேப்பம்பூ மாங்காய் பச்சடி செய்முறை

வேப்பம்பூ பச்சடி
தேவையான பொருட்கள் 

மாங்காய் : பெரியது 2
வெல்லம் : தேவையான அளவு
வேப்பம்பூ : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பச்சைமிளகாய் : 5

வேப்பம்பூ பச்சடி

செய்முறை:

மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வேப்பம்பூவை வாசம் வரும் வரை  வறுக்க வேண்டும். வெல்லத்தை நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். மாங்காயை வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயையை மாங்காயுடன் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன்  கலக்கி  சூடாக்க வேண்டும். இத்துடன் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொதி வந்த உடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

செயற்கை காலுடன் நடக்கும் யானை!! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!