உக்ரைன் மீது ரஷியா 'டிரோன்' மழை: 16 பேர் பலி - விடிய விடிய அதிர்ந்த நகரங்கள்!

 
உக்ரைன் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தனது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி ரஷியப் படைகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில், தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன. விடிய விடிய நீடித்த இந்தத் தாக்குதலில் 12 வயது சிறுவன் உட்பட இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது டிரோன்கள் மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துகளில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர், அங்கு பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன. கீவ் நகரில் டிரோன் ஒன்று 18 மாடி கட்டடத்தின் மீது நேராக மோதியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறக்கத்தில் இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நகரங்கள் இருளில் மூழ்கின. உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை பல இலக்குகளை சுட்டு வீழ்த்திய போதிலும், சில டிரோன்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கொடூரத் தாக்குதலைப் போர் குற்றம் எனச் சாடியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு உலக நாடுகள் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆவேசம் குறையாத ரஷியா, சமீபகாலமாகப் பகல் நேரங்களிலும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை