உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி!! தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!!

 
சாண்டி உம்மன்

மறைந்த முன்னாள் கேரள முதல்வர்   உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.  செப்டம்பர் 5ம் தேதி கேரளாவில்  உம்மன்சாண்டியின்  புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்   மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

சாண்டி உம்மன்


இந்நிலையில், 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் கேரளா புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 10 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்


 சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். கட்சி 2ம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3ம் இடமும் பிடித்துள்ளன. தொடர்ந்து 50 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web