கெத்து... ஐநா தலைமையகம் முன்பு ஏ.ஆர்.ரகுமான்... !!

 
ஏ.ஆர்.ரகுமான்

1992ல் தமிழ் திரையுலகில்  ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான்.  அடுத்தடுத்த வெற்றி படங்கள் அவரை சினமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஆக்கியது. அயலான், கோப்ரா, இரவினில் நிழல் உட்பட பல  படங்களில் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரகுமான் இசைத்துறையில் பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் பெற்றவர்.  


 

தென் இந்திய மொழிகள், வடமொழிகளையும் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஏ.ஆர்.ரகுமானின் இசை பல பரிமாணங்களில் நீக்கமற நிறைந்து இருக்கிறது.  
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு வெளியே தான் நிற்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ரகுமான் அமீன்

ஆனால், எதற்காக ஐ.நா. அவைக்கு சென்றார் என்ற தகவலை அவர் பதிவிடவில்லை.   2016ல்  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா.வில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய 2வது இந்தியர் ஏஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web