’மத்திய பட்ஜெட் 2024'.. குறையும் செல்போன் விலை!

 
செல்போன்

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024ல், செல்போன்கள் மற்றும் அவற்றின் துணைக்கருவிகள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவடைகிறது.

நிர்மலா

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் அதன் துணைப் பொருட்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட 20 சதவீத சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளில் உள்நாட்டு செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

செல்போன்

இதேபோல், மொபைல் போன்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரித்துள்ளது. அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுகர்வோர் நலன் கருதி, அடிப்படை சுங்க வரியை குறைக்கவும், மின்சார மின்தேக்கிகள் தயாரிப்பதற்கு ஆக்ஸிஜன் இல்லாத காப்பரில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிசிடியை நீக்கவும் முன்மொழிகிறேன் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!