நெகிழ்ச்சி... ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிதியுதவி... ஆந்திரா தெலங்கானா மக்களுக்கு நிவாரணம்!
இந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்கனமழை காரணமாக கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 33 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
రెండు తెలుగు రాష్ట్రాల్లో ఇటీవల కురిసిన భారీ వర్షాల వల్ల జరుగుతున్న వరద భీభత్సం నన్ను ఎంతగానో కలచివేసింది. అతిత్వరగా ఈ విపత్తు నుండి తెలుగు ప్రజలు కోలుకోవాలని నేను ఆ దేవుడిని ప్రార్థిస్తున్నాను.
— Jr NTR (@tarak9999) September 3, 2024
వరద విపత్తు నుండి ఉపశమనం కోసం రెండు తెలుగు రాష్ట్రాల ప్రభుత్వాలు తీసుకొనే చర్యలకి…
இரு மாநிலங்களிலும் பெய்த பெருமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' நடிகர் தவிர, 'கல்கி 2898 ஏடி' தயாரிப்பாளர்களும் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
ஜூனியர் என்டிஆர் தனது X தளத்தில் தாராளமாக நன்கொடை அளித்ததை குறித்து “ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்துள்ளார். கடும் மழையால் இரண்டு தெலுங்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன். தெலுங்கு மக்கள் விரைவில் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Let's strive for a better tomorrow.@AndhraPradeshCM pic.twitter.com/AvneI83YAo
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 2, 2024
என் தரப்பில், நான் அறிவிக்கிறேன். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ50 லட்சம் நன்கொடை அளித்து, வெள்ளப் பேரிடரில் இருந்து நிவாரணம் பெற இரு தெலுங்கு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இடைவிடாத மழை தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துவதால், பரவலான வெள்ளத்திற்கு வழிவகுத்தது. இதுவரை சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளம், குறைந்த அழுத்த அமைப்பால் முக்கிய சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!