வீடியோ.. வந்தாச்சு யுபிஐ ஏடிஎம்.. டெபிட் கார்டே தேவையில்ல.. எப்படி பணம் எடுப்பது?

 
யுபிஐ

இந்தியா  முழுவதும் நடைபாதை, சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி மல்ட்டிபிளக்ஸ் மால்கள், சினிமா தியேட்டர்கள் வரை அனைத்திலும் பணப்பரிவர்த்தனை   டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் தற்போதைய நாட்களில் இதனை மேலும் மேம்படுத்தவும், எளிதான நடைமுறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஆர்பிஐ பல அதிரடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி  டெபிட் கார்டு இல்லாமல் பணம் செலுத்தும் மற்றும் எடுக்கும்  வசதி அறிமுகப்படுத்தப்பட்டு  மக்களால்   அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  



டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா  உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த ஏடிஎம். இந்நிலையில், இதில் ஃபின்டெக் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வீடியோ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் யுபிஐ கார்டுலெஸ் கேஷ் ஆப்ஷனை அவர் தேர்வு செய்கிறார். தொடர்ந்து ரூ.100, 500, 1000, 2000, 5000 மற்றும் இதர தொகை என பயனர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பது திரையில் காட்டப்படுகிறது. அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தொகையை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் திரையில் க்யூஆர் கோட் வருகிறது. அதை பயனர்கள் தங்கள் போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து, பணம் எடுக்கப்படுவது குறித்து உறுதி செய்ய வேண்டும்.

யுபிஐ

பின்னர் யுபிஐ ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அது வெற்றி பெற்றதும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.   BHIM செயலியில் மட்டுமே இயங்க தொடங்கியுள்ளது. படிப்படியாக  இனிவரும் நாட்களில் அனைத்து யுபிஐ செயலியிலும் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  யுபிஐ ஏடிஎம் சேவை படிப்படியாக பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web