யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா?!

 
மனோஜ் சோனி

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக பதவி வகித்து வரும் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடன் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் மனோஜ் சோனி, யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக குஜராத்தில் உள்ள மகாராஜா சாயஜிராவ் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரையிலும், பாபாசாஹேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2015 வரையிலும் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா விவகாரத்துக்கும் மனோஜ் சோனி ராஜினாமாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2029ம் ஆண்டு வரை மனோஜ் சோனியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web