7000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்களுக்கு அமெரிக்கா தடை!

 
அமெரிக்கா
 

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற கொள்கையின் கீழ் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டண மாற்றங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும் முயற்சியில், ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக செயல்படுகிறது.

அமெரிக்கா

இந்த நிலையில், ஆங்கிலம் தெரியாத 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களுக்கு அமெரிக்கா பணியாற்ற தடை விதித்துள்ளது. இதனால் இந்திய லாரி ஓட்டுநர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஓர் இந்திய ஓட்டுநர் மூன்று அமெரிக்கர்களை உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி, “வர்த்தக லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் பேசவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

ட்ரம்ப்

புதிய விதிகளின்படி, ஓட்டுநர்கள் சாலை அறிகுறிகளைப் புரிந்துகொள்வது, அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், பொதுமக்களுடன் உரையாடுதல் போன்றவற்றில் ஆங்கில அறிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆங்கிலப் புலமைத் தேர்வில் தோல்வியடைந்த 7,248 லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைக்கும் முயற்சியாகக் கருதப்படுவதுடன், அமெரிக்காவில் லாரி ஓட்டுநர் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தும் என தொழிலாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!