உஷாரா இருந்துக்கோங்க.. NSEயின் F&O தடை பட்டியலில் இரு பங்குகள் தெரியுமா?

 
என்.எஸ்.சி ஷேர்

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பிப்ரவரி 9ம் தேதிக்கான அதன் F&O தடை பட்டியலில் சேர்த்துள்ளது, இந்த ஸ்கிரிப் சந்தை அளவிலான நிலை வரம்பில் 95 சதவீதத்தை தாண்டிய பிறகு இந்நிலைக்கு தள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமையான இன்று NSEல் பங்கு ரூபாய் 118.10க்கு வர்த்தகமாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக, பங்குகள் ஐந்தாவது தொடர்ச்சியான அமர்வுக்கு, குறிப்பாக முந்தைய சில அமர்வுகளில் 20-24 ரூபாயாக திருத்தப்பட்ட பிறகு, பட்ஜெட் நாளின் வரம்பு ரூ.114-125க்குள் ஒருங்கிணைக்கப்பட்டு நகர்கிறது.

இந்தியா புல்ஸ் ஷேர்

மேலும் இது குறுகிய கால மற்றும் நீண்ட கால நகரும் சராசரிக்கும் கீழே வர்த்தகம் செய்து வருகிறது. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது டிசம்பர் FY23 காலாண்டு வருவாயை அடுத்த வாரம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறது. அதைப் பொறுத்து தான் பங்குகளின் மீது காதல் ஏற்படுமா என்பது தெரியும்.

மற்றொரு பங்கு அம்புஜா சிமெண்ட்ஸ், F&O தடையில் சிக்கி இருக்கிறது. இந்த பங்கு பிப்ரவரி 1 வரையிலான ஒன்றரை வாரத்திற்கு சமீபத்திய பெரிய திருத்தத்திற்குப் பிறகும், கூர்மையாக மீண்டு வர முடிந்தது, ஆனால் பிப்ரவரி 8ம் தேதி ஐந்தாவது அமர்வுக்கு பட்ஜெட் நாளின் வரம்பில் ரூபாய்  320-413 க்குள் வர்த்தகம் செய்து வருகிறது.

அம்புஜா சிமெண்ட்ஸ்

அம்புஜா சிமெண்ட்ஸ் அதானி குழுமத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த மாதம் அதானி குழுமம் பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டியது. அதன் பின்னர் இந்த பங்கில் அதிக ஏற்ற இறக்கம் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அம்புஜா சிமெண்ட்ஸ் தற்பொழுதைய நிலவரப்படி NSEல் 1.79 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 364.20க்கு வர்த்தகமாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web