வாச்சாத்தி வன்கொடுமை.. பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ10லட்சம், அரசு வேலை.. அதிரடி தீர்ப்பு!!

 
வாச்சாத்தி

1992 ல்  தர்மபுரி வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வந்த தகவலை விசாரிக்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தின. அதில்  இளம் பெண்கள் 18 பேரை |அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.

வாச்சாத்தி

இதனை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவின்  மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்  வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என  மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது . அத்துடன்   பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.   அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.  

உயர்நீதிமன்றம்

குற்றம் புரிந்தவர்களிடம் ரூ5 லட்சம் வசூலிக்கப்பட  வேண்டும். அத்துடன் அப்போது பணியில்  இருந்த அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் அல்லது  அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே  விதித்துள்ளது. இது தவிர தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!