வடிவேலுவின் சகோதரர் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
வடிவேலு சகோதரர்

தமிழ் சினிமாவில் வைகைப் புயலாக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.இவரது தாயார் இந்த வருடத் தொடக்கத்தில் காலமானார்.  அதிலிருந்தே இன்னமும் மீளாத அவர் குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம் நடந்துள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவின்  உடன் பிறந்த சகோதரரான ஜெகதீஸ்வரன் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடிவேலு சகோதரர்

அவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் காலமானார்.   வடிவேலுவின் இளைய சகோதரரான ஜெகதீஸ்வரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rip

இவர்   நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட மற்றும்  சொத்து பிரச்சனைகளால் சினிமாவில்தொடர முடியவில்லை என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.  இப்போது ஜவுளிக்கடை பிசினஸ் நடத்தி வந்த நிலையில்  சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தன்னை தேடி வந்தாலும் அதனை தவிர்த்து வந்தார்.  அவரது இழப்பு நடிகர் வடிவேலுவின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web