திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் நடிகர் வடிவேலு... பரபரக்கும் திரைத்துறை வட்டாரம்!

 
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” அலப்பறையாக வடிவேலு ரீஎன்ட்ரி!.

இந்தியாவில் வெகு விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்  வடிவேலு  திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவர் படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் கூட  வடிவேலு இல்லாத மீம் உலகமே கிடையாது என்கிற அளவுக்கு   சமூகவலைதளங்களில் பிரபலமானவர்.  

வடிவேலு

2011  வரையில் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்தார், அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.  ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக   அவரது திரை வாய்ப்புகள் குறைந்து போயின. இதற்கு   காரணம் அவர் திமுகவுக்கு ஆதரவாக   2011தேர்தலில் பிரச்சாரம் செய்தது தான் என்கின்றனர் நெருக்கமான வட்டாரங்கள். இதற்காகத் தான் சுமார்  10 ஆண்டு காலமும் வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய சூழ்நிலை. தற்போது திமுக வெற்றிக்கு பிறகு   மீண்டும் நடிப்பில் பிசியாகி உள்ளார்.

வடிவேலு


 இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  நடிகர் வடிவேலு இது சமாதி இல்லை, சன்னதி,  கலைஞரின் தீவிர பக்தன் எனவும் கூறிக்கொண்டார்.  மேலும்  மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில்  போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து  தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் வடிவேலுவும் இதற்கு ஓகே சொன்னதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும்  இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web