எகிறும் எதிர்பார்ப்பு... 15 வருடங்களுக்குப் பின் சுந்தர்.சி. யுடன் இணைந்த வடிவேலு!
இயக்குநர் சுந்தர்.சி யுடன் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படமொன்றில் இணைகிறார் நடிகவர் வடிவேலு.
தமிழ் திரைப்பட ரசிகர்களின் எவர்க்ரீன் காம்பினேஷனான வடிவேலு- சுந்தர்.சி கூட்டணி மனவருத்தத்தில் பிரிந்த நிலையில், வின்னர் கைப்புள்ள, பேக்கரி வீரபாகு என்று ஹிட் அடித்த காமெடி காம்போ இருவரின் படங்களிலுமே மிஸ் ஆனது. ‘லண்டன்’ ஜாமீன், ‘தலைநகரம்’ இப்போ டைம் சரியில்லை என்று வடிவேலுவுக்காகவே டைலர் மேட் கதாபாத்திரங்களாக சுந்தர்.சி. யின் படங்கள் வலம் வந்தன. சுந்தர். சி இயக்கிய படங்களில் வடிவேலுவின் நகைச்சுவையும் அவரது கதாபாத்திர பெயர்களும் எப்போது பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் ரசிக்கக் கூடியவையாக இப்போதும் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

இந்த ஹிட் காம்போ 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை நடிகை குஷ்பு தயாரிக்க, சுந்தர். சி இயக்கி, நடித்திருக்கிறார். சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். ’கைப்புள்ள’, ‘வீரபாகு’ போன்ற வடிவேலுவின் கதாபாத்திரங்களைப் போல, ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் கதாபாத்திரமும் வடிவேலுக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர். சி.

கேத்ரீன் தெரசா, முனீஷ்காந்த், மைம் கோபி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து படத்தை வெளியிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார் சுந்தர். சி.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
