கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப்பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து 15 பேர் படுகாயம்!

 
van accident

 கரூர் மாவட்டத்தில்   கூட்டுறவுத் துறையில் பணிபுரியும்  தொழிலாளர்கள்   குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். கரூர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் இவர்கள் அனைவரும் ஒன்றாக  ஒரு வேனில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதிக்கு சென்றனர்.   ஜாலியாக சுற்றுலா முடிந்து  மீண்டும் கரூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வேனில் நேற்று மாலை திரும்பி வந்து  கொண்டிருந்தனர்.

விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கோட்டநத்தம் கிராமத்தில் வசித்துவரும் 27 வயது இளைஞர் ஈஸ்வர மூர்த்தி தான் வேன் ஓட்டுனர்.  இந்த வேன் மலைப்பாதையில் 11வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த  2 குழந்தைகள்,  6 பெண்கள்  உட்பட 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அத்துடன் வேன் ஓட்டுனரும் படுகாயம் அடைந்தார்.  

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம்  குறித்து தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  ஆம்புலன்ஸ்   மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். அருகில் உள்ள  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.   இந்த விபத்து   காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!