காரும் வேனும் நேருக்கு நேர் மோதல்.. 10 பேர் படுகாயம்!!

 
விபத்து

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து வேன் ஒன்று கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேன் ரங்கன் காட்டூர் காலனியில் இருந்து கவுந்தப்பாடி வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில்  10 பேர் படுகாயம் அடைந்தனர்.    

விபத்து

அக்கம் பக்கத்தினர் உனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   காவல்துறையினர்  படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் வாகனங்களை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web