60 வயது நிறைவு... வானதி சீனிவாசன் திருக்கடையூரில் கணவருடன் சாமி தரிசனம்... !!

 
வானதி சீனிவாசன்

 
தமிழகத்தின் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். இவர் பாஜக மகளிர் அணி தலைவியாக இருந்து வருகிறார். இவருடைய கணவர் சீனிவாசன். இவருக்கு 60 வயது நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.மயிலாடுதுறை மாவட்டத்தில்  திருக்கடையூரில் உள்ள ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

வானதி சீனிவாசன்

இந்த கோவிலில் கஜ பூஜை, கோ பூஜை செய்து பிள்ளையார், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீஅபிராமி சன்னதியில் கணவருடன் சாமிதரிசனம் செய்தார். அப்போது பிரதமர்  மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். அப்போது    தன்னுடன் வந்திருந்த பாஜக நிர்வாகிகள் அனைவரின்  பெயர், நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்ய வலியுறுத்தினார்.அத்துடன்  ஸ்ரீ அபிராமி சன்னதியில் வழிபாடு மேற்கொண்டு வானதி சீனிவாசன்  தம்பதியினர்  மாலை மாற்றிக்கொண்டனர்.  இனிப்புகள் ஊட்டி 60 வயது பூர்த்தி விழாவை  கொண்டாடினர். தம்பதிகளிடம்   பாஜக நிர்வாகிகள்   ஆசி பெற்றனர்.

வானதி சீனிவாசன்


 வானதி சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , ” தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றன. விவசாயிகளின்  நலனை பாதுகாக்க வேண்டும் எனில்  தமிழகமுதல்வர் ஸ்டாலின்  தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். அதை விடுத்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம், அறிக்கை விடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. அமைச்சர் உதயநிதி  புதிதாக அடுத்தடுத்து கதை சொல்லி வருகிறார்.  சொல்ற கதைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வேறு மாதிரி பதில் கூறி வருகிறார். கோயிலில் இருப்பதால் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை’’ எனக் கூறியுள்ளார்  .  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்