வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு!!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் செப்டம்பர் 9ம் தேதி  சனிக்கிழமை இன்று முதல் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம்.  பெரியவர்களுக்கான   நுழைவு கட்டணம் ரூ 115 லிருந்து ரூ200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

வண்டலூர்

 இருசக்கர வாகனங்கள்,  3 சக்கர வாகனங்கள், 4  சக்கர வாகனங்கள், வேன், டெம்போ ,  மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்த கட்டணம் மணி கணக்கில் இருந்து நாள் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது.   சபாரி வாகன கட்டணம் ரூ 50லிருந்து  ரூ 150 ஆகவும் வீடியோ ஒலிப்பதிவு கட்டணம் ரூ 500லிருந்து  ரூ 750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

5  முதல் 12 மற்றும் 13 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமானது இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு ,அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் கட்டண சலுகையாக ரூ 20 மட்டும் வசூலிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ. 200 வரை ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web