சென்னை-ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் ... பயணிகள் வரவேற்பு!
சென்னையிலிருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் நேரத்தில் வந்த பாரத் ரயிலை இயக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாளில் ராமேஸ்வரம் சென்று சென்னை திரும்பும் வகையில் ரயில் பாதையை திட்டமிட முடிவு செய்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
