20 பெட்டிகளுடன் நெல்லை வந்தே பாரத் ரயில்... பயணிகள் வரவேற்பு!

 
வந்தே பாரத்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னை வரும்  வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023ல் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1. 40 மணிக்கு அதாவது 7 மணி நேரம் 45 நிமிடங்களில் சென்னையை வந்தடைகிறது.  
அதிநவீன வசதி, அதிவேகம், குறைந்த பயண நேரம் உட்பட பல  காரணங்களால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக  ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.

வந்தே பாரத்

இந்த ரயிலில் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் காத்திருப்போா் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் இதை 20 பெட்டிகளை கொண்ட ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் சென்னை ஐசிஎஃப்-இல் 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலை உருவாக்கி ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தது.

வந்தே பாரத்

இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் புதன்கிழமை காலை 6.05 மணிக்கு தனது சேவையை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.  16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டபோது, அதிகபட்சமாக 1,128 பயணிகள் பயணம் செய்தனா். இப்போது பயணிகளின் எண்ணிக்கை 1,440 ஆக உயரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?